கென்யா தலைநகர் நைரோபியில் தேசிய பூங்கா உள்ளது. இங்கு வனவிலங்குகள் இயற்கையாக சுற்றித்திரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 6 சிங்கங்கள் அங்கிருந்து தப்பின. அவை, ஊருக்குள் புகுந்தன. பின்னர் 4 ஆடுகளை அடித்து கொன்று தின்றன.
இதை பார்த்து பொதுமக்கள் திரண்டனர். ஆடுகளை கொன்ற சிங்கம் தங்களையும் தாக்க கூடும் என அஞ்சினர். எனவே, இந்த 6 சிங்கங்களையும் அடித்து கொன்றனர். அதில் 2 பெரிய சிங்கங்கள், 2 நடுத்தர சிங்கங்கள் மற்றும் 2 குட்டிகள் அடங்கும். இது குறித்து தேசிய பூங்கா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சிங்கங்கள் கொல்லப்பட்டதால் பூங்காவின் வருமானம் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த பூங்காவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தற்போது சிங்கங்கள் இல்லாததால் அங்கு பொதுமக்கள் வரத்து குறைந்துள்ளது.
0 comments:
Post a Comment