பேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ள புதிய வசதி!


இணைய மற்றும் சமூகவலையமைப்பில் பல புதுமைகளைப் புகுத்திய நிறுவனங்களில் பேஸ்புக்கும் ஒன்று.

இந்நிலையில் பேஸ்புக் தனது பாவனையாளர்களுக்கென அப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களைப்போல 'எப் ஸ்ட்ரோர்' ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளது.

இதனூடாக பேஸ்புக் பாவனையாளர்கள் அப்ளிகேஷன்களைக் கொள்வனவு செய்யமுடிவதுடன், டெவலப்பர்கள் தங்களது அப்பிளிகேஷன்களை விற்பனை செய்யவும் முடியும்.

அப்பிளின் 'ஐ டியூன்ஸ்', கூகுளின் 'பிளே' ஆகிய 'எப் ஸ்டோர்களைப் போலவே பாவனையாளர்கள் பேஸ்புக்கின் 'எப் ஸ்டோரில்' உள்ள அப்ளிகேஷன்களையும் தரப்படுத்த முடியும்.

இதில் மொபைல் மற்றும் கணனிகளுக்கான அப்ளிகேஷன்களும் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதன்மூலம் பேஸ்புக்கின் 900 மில்லியன் பாவனையாளர்களும் நன்மையடைவர் என அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.

இதேவேளை பேஸ்புக்கின் வருவாய் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பேஸ்புக்கினைக் கையடக்கத்தொலைபேசி மற்றும் டெப்லட் போன்ற மொபைல் சாதனங்களின் ஊடாக உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையே இதற்கான பிரதான காரணமாகும்.

மொபைல் சாதனங்களில் குறைந்தளவு விளம்பரங்களையே பேஸ்புக்கினால் வழங்கமுடியும், சாதாரண கணனிகளுடன் ஒப்பிடும் போது இது மிகக்குறைவு.

பேஸ்புக்கின் வருவாயில் பெருந்தொகை, விளம்பரங்களின் மூலமே கிடைக்கப்பெறுகின்றது.

தற்போது குறைந்துவரும் வருவாயை ஒருவாறு ஈடுகட்டும் முகமாகவே பேஸ்புக் ' எப் ஸ்டோரினை' ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India