ஆஸ்திரேலியாவில் கொலரோடாவில் உள்ள டென்வர் நகரை சேர்ந்தவர் ஸ்டீவ் கிரேசெலஸ் (40). போட்டோகிராபராக பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சிறநீரக கல் நோயினால் அவதிப்பட்டு வந்த இவர் சிகிச்சை பெற ஆஸ்பத்திரி சென்றார். அவருக்கு அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் செய்தனர். அப்போது ஆண் மகனான அவருக்குள் பெண்மையும் ஒழிந்து இருப்பது தெரிய வந்தது.
அவரது வெளித்தோற்றமும் உடல் உறுப்புகளும் ஒரு ஆணுக்குரியவைகளாக உள்ளன. அதே நேரத்தில் உடலுக்குள் பெண்களுக்கான உறுப்புகள் மறைந்து இருப்பதை நர்சு கண்டுபிடித்து டாக்டர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து ஸ்டீவிடம் டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது அவர் தனது சிறுவயதில் பெண்மைக்குரிய குணங்கள் தன்னிடம் அவ்வப்போது தலை தூக்கியதாக தெரிவித்தார். தனது தாயாரின் ஆடைகள் மற்றும் நகைகளை அணிந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் பெண் போன்று 'மேக்அப்' போட்டு கொண்டதாகவும் கூறினார்.
0 comments:
Post a Comment