சிந்து சமவெளி நாகரீகம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். மொகஞ்சதாரோ ஹரப்பா ஆகிய இடங்களில் புதையுண்ட நகரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போது இவை பாகிஸ்தானில் உள்ளன. இந்த சிந்து சமவெளி நாகரீகம் கடந்த 5,200 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது. இதையடுத்து 3 ஆயிரம் முதல் 3900 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அங்கு நகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
செழிப்பாக இருந்த அப்பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பொய்த்து விட்டது. இதனால் சிந்து நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தண்ணீர் வற்றி விட்டது.
இதையடுத்து 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது அழிந்து மண்ணோடு மண்ணாகி புதைந்து விட்டது. இந்த தகவலை புதிய ஆய்வின் மூலம் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த லிவியூ சியோசன் தலைமையிலான குழுவினர் கடந்த 2003 முதல் 2008-ம் ஆண்டு வரை நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment