பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கொகிஸ்தான் என்ற மலைப் பிரதேச மாவட்டம் உள்ளது. இங்கு மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் பழமைவாதி.
இந்த நிலையில் அங்கு காடா என்ற கிராமத்தில் ஒரு திருமண விழா நடந்தது. அதில் ஆட்டம், பாட்டம் இடம் பெற்றது. அதற்கு ஏற்ப ஆண்களும், பெண்களும் பாட்டுப்பாடி நடனம் ஆடினர்.
இது மத சம்பிரதாயங்களுக்கு எதிரானது என அப்பகுதி பழமைவாத மத குருமார்கள் கருதினர். இதைத் தொடர்ந்து திருமணத்தின் போது ஆடி பாடிய 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து முதலில் ஆண்களை கொல்ல ஏற்பாடுகள் நடந்தது. இதை அறிந்த பெண்கள் தப்பி ஓடி தலைமறைவானார்கள். இதுபற்றி அறிந்த போலீசார் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்று மரணத்தின் பிடியில் இருப்பவர்களை காப்பாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இந்த தகவலை கொகிஸ்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அப்துல் மஜீத் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment