பேஸ்புக்கில் நட்பான சென்னை பெண்களை ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த வாலிபர்கள் கைது

width="200"



வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேசனிடம் சென்னை திருவல்லிக்கேணி உலகப்பன் தெருவை சேர்ந்த இளம்பெண் மைக்கேல் சுஜித்ரா கொடுத்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

நான் தனியார் நிறுவனத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். அங்கு வேலை செய்யும் காயத்ரிதேவி என்ற பெண்ணை எனக்கு தெரியும். காயத்ரிக்கு பேஸ்புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். அதைத் தொடர்ந்து சதீஷ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த்பாபு ஆகியோர் காயத்ரி மூலம் எனக்கு பழக்கமானார்கள்.

கடந்த ஜனவரி மாதம் சதீசும், ஆனந்த்பாபு சென்னை வந்து எங்களை வேலூரில் உள்ள கோவிலுக்கு செல்லலாம் என்று கூறி அழைத்து சென்றனர். ஆனால் கோவிலுக்கு போகவில்லை. வேலூரில் உள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். அங்கு காயத்ரி, சதீஷ் ஒரு அறையிலும் நானும் ஆனந்தும் ஒரு அறையிலும் தங்கினோம். அப்போது ஆனந்த் என்னை தீவிரமாக காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஆசைவார்த்தை கூறி சத்தியம் செய்து என்னுடன் உல்லாசமாக இருந்தார். மறுநாள் நாங்கள் சென்னை வந்து விட்டோம்.

அதைத்தொடர்ந்து நாங்கள் தொலைபேசியில் பேசிகொண்டு இருந்தோம். பின்னர் பிப்ரவரி மாதம் சதீஷ் தொடர்பு கொண்டு ஆனந்தும் நானும் ஓட்டலுக்கு வந்து விடுகிறோம். நீயும், காயத்திரியும் வருமாறு கூறினார். நாங்களும் சென்று அங்கு 2 நாட்கள் உல்லாசமாக இருந்தோம். அதைத்தொடர்ந்து சிலநாட்கள் ஆனந்த்பாபு தொலைபேசியில் பேசுவதை நிறுத்தினார். மார்ச் மாதம் மீண்டும் ஓட்டலுக்கு வருமாறு கூறினார். நான் வர மறுத்து விட்டேன்.

அப்போது ஆனந்த்பாபு நாம் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து பதிவு செய்து உள்ளேன். நீ சம்மதிக்கவில்லை என்றால் இன்டர்நெட்டில் வெளியிடுவதாக மிரட்டினார். அதனால் நான் மீண்டும் ஓட்டலுக்கு சென்று ஆனந்த்பாபுவுடன் உல்லாசமாக இருந்தேன். இந்நிலையில் காயத்ரிதேவியை சதீஷ் ஏமாற்றி விட்டதாகவும், மேலும் அவர்கள் ஒரு கும்பலாக சேர்ந்து பல குற்றங்களில் ஈடுபடுவதாகவும் எனனை போல பலரை இப்படி ஏமாற்றியதும் தெரியவந்தது. எனவே ஆனந்த்பாபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சதீஷ், திலீப், லூயிஸ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அவருடன் காயத்ரிதேவியும் வந்து இருந்தார்.

சுஜித்ராவும், காயத்ரிதேவியும் அளித்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். போலீசார் கூறிய யோசனையின்படி மீண்டும் சுஜித்ராவும், காயத்ரிதேவியும், தங்களுக்கு பேஸ்புக்கில் அறிமுகமான வாலிபர்களிடம் நைசாக பேசி ராணிப்பேட்டை விடுதி ஒன்றிற்கு வருமாறு அழைத்தனர். அதை நம்பி நேற்றிரவு 9 மணி அளவில் ஆசையுடன் வந்த வாலிபர்கள் 2 பேரும் போலீசாரின் வலையில் சிக்கினர்.

அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India