எச்.ஐ.வியை வீட்டிலேயே சோதனை செய்து கொள்வதற்கான கருவியை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது.
''ஒராகுயிக்'' என்னும் பெயரிலான இந்த கருவியை, வாயில் தடவி எடுப்பதன் மூலம் ஏதாவது நோய்க்கிருமிகள் உடலில் இருக்கிறதா என்பதை 20 நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும்.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இது அங்கீகரிக்கப்பட்டால், எச்.ஐ.வியை உடனடியாக வீட்டிலேயே சோதனை செய்துகொள்வதற்கான முதலாவது கருவியாக இது இருக்கும்.
இந்தக் கருவியின் மூலமான சோதனை முடிவுகள் 100 வீதம் துல்லியமானவை என்று சொல்லமுடியாத என்ற காரணத்தால், தவறான முடிவுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பது குறித்து கடுமையான எச்சரிக்கையையும், இந்த கருவியின் பொதியில் பொறிக்க வேண்டும் என்று சில குழு உறுப்பினர்கள் வாதாடினார்கள்.
0 comments:
Post a Comment