தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு நகரம் நிலத்துக்கு கீழ் இருக்கப் பெறுகின்றது. வீடு, பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலை போன்றன உட்பட கட்டிட நிர்மாணங்கள் அனைத்துமே நிலத்துக்கு கீழ்தான் உள்ளன.
இந்நகரத்துக்கு Coober Pedy என்று பெயர். ஓபல் என்று சொல்லப்படுகின்ற ஒரு வகை மாணிக்க கற்களுக்கு பெயர் போன இடம். இது ஓபல் மாணிக்க கற்களின் உலகத் தலைநகரம் என்றுகூட வர்ணிக்கப்படுகின்றது. ஏனென்றால் உலகின் 30 சதவீத ஓபல் மாணிக்க கற்கள் இங்கிருந்துதான் பெறப்படுகின்றன.
மிகவும் மோசமான பாலைவன காலநிலைதான் மக்களை நிலத்துக்கு கீழ் வாழ தூண்டி இருக்கின்றது. மூன்று படுக்கை அறைகள், குசினி, குளியலறை, பொழுது போக்கிடம் ஆகியவற்றை கொண்டனவாக சாதாரணமாக வீடுகள் கட்டப்படுகின்றன. இவை பாறைகளை குடைந்து அமைக்கப்படுகின்றன. இவ்வீடுகளுக்கு எயர் கண்டிஷன் வசதிகள் தேவை இல்லை. ஏனெனில் நிலையான வெப்ப நிலைதான் காணப்படுகின்றது. கோடை காலத்தில் 40 முதல் 50 பாகை வரைதான் வெப்ப நிலை நிலவுகின்றது.
உலகின் பல நாடுகளில் இருந்து வகை தொகை இன்றி சுற்றுலா பயணிகள் இந்நகரத்தை பார்வையிட வந்த வண்ணம் உள்ளார்கள். சுரங்கங்கள், நிலக் கீழ் தேவாலயங்கள் மற்றும் சுடுகாடுகள் ஆகியன உல்லாச பயணிகளை இங்கு பெரிதும் ஈர்க்கின்றன. இங்கு இரவில்தான் கல்ப் விளையாட வெப்ப நிலை இடம் கொடுக்கின்றது. ஆனால் புல் மைதானம் கிடையாது. எனவே வீரர்கள் சிறிய Tee Off Turf களை பயன்படுத்த வேண்டி உள்ளது.

































0 comments:
Post a Comment