ஆமை ஓட்டுச் சிறுவன் என்று அழைக்கப்பட்டு வந்த ஆறு வயது பையனுக்கு பிரித்தானிய வைத்திய நிபுணர்களின் மனிதாபிமான சத்திர சிகிச்சையால் புதுவாழ்வு கிடைக்கப் பெற்று உள்ளது. சிறுவனின் பெயர் Didier Montalvo. கம்போடியாவில் மிகவும் வறுமைப்பட்ட குடும்பம் ஒன்றை சேர்ந்தவர்.
பிறப்பில் இருந்து இவரது பின்புறத்தில் பெரிய மறு ஒன்று இருந்து வந்திருக்கின்றது. இது இவரது பின்புறம் முழுவதையும் கிட்டத்தட்ட பிடித்து இருந்தது. இது ஆமையின் ஓடு போல காட்சி அளித்தது. இதனால்தான் இவர் ஆமை ஓட்டுச் சிறுவன் என்று உலகத்தால் அறியப்பட வேண்டியவர் ஆயினார்.
இந்த மறு காரணமாக இவரால் எந்தவொரு அன்றாட, அடிப்படை நடவடிக்கைகளை செய்ய முடியவில்லை. நையாண்டி செய்யப்பட்டு பாடசாலையில் இருந்து விலத்தப்பட்டார். இவர் கடவுளால் சபிக்கப்பட்டவர் என்று ஊரவர்கள் பழி சொல்லி வந்திருக்கின்றனர். இந்நிலையில் குடும்பத்தினர் இவரது எதிர்காலத்தை எண்ணி எந்த நாளும் கலங்கிக் கொண்டு இருந்தனர்.
ஆயினும் இவரது சிகிச்சைக்கு தேவையான பணத்தை சேர்க்க குடும்பத்தினரால் முடியவில்லை. ஆயினும் பிரித்தானியாவைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர்கள் குழு இவரின் கஷ்டப்பாடுகளை அறிந்து சிகிச்சை வழங்க முன் வந்தது.
இக்குழுவினர் கம்போடிய தலைநகருக்கு வந்தனர். சிறுவனுக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்டனர். சிறுவனின் மறுவை முழுமையாக அகற்றினர்.
இச்சத்திர சிகிச்சை மிகுந்த போராட்டமாக அமைந்தது, முன்பு மேற்கொண்டிருந்த சத்திர சிகிச்சைகளை காட்டிலும் சவால்கள் நிறைந்ததாக இருந்தது என வைத்திய நிபுணர்கள் குழுவின் தலைவர் தெரிவித்து உள்ளார்.
இன்னும்.. இன்னும் வளர ஆசைப்படுகின்றார் என்றும் அதற்கு மறு முன்பு இடம் கொடுத்து இருக்கவில்லை என்றும் சிறுவன் கருத்துக் கூறி உள்ளார்.
0 comments:
Post a Comment