இன்று உலகின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக ஐ போன் மாறி வருகின்றது. கணிசமான பெண்கள் இதை பயன்படுத்துகின்றனர். பொதுவாக நீள காற்சட்டை பொக்கெற்றுக்கள், காசுப் பைகள், கைப் பைகள் போன்றவற்றுக்குள் வைத்து ஐ போனை எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால் பெண்கள் ஐ போனை பத்திரமாக வைக்கின்ற இடமாக மார்புக் கச்சையை சொல்ல முடியாது. இருப்பினும் இந்நிலை மாறுகின்றது. ஐ போனை பெண்கள் பத்திரமாக கூடவே வைத்திருக்கின்றமைக்கு வசதியாக ஒரு வகை மார்புக் கச்சைஅமெரிக்காவில் தயாராகி உள்ளது.
இவ்வகை மார்புக் கச்சைக்கு JoeyBra என்று பெயர். வேறு மார்க்கம் இல்லாதபோது இந்த மார்புக் கச்சைக்குள் ஐ போனை பாதுகாப்பாக வைக்க முடியும் என்கின்றனர். இந்த மார்புக் கச்சை Washington juniors பல்கலைக்கழகத்தை சேர்ந்த Mariah Gentry, Kyle Bartlow ஆகியோரின் சிந்தனையின் உருவாகி உள்ளது.
எல்லா இடங்களுக்கும் கைப் பை போன்றவற்றை பெண்களால் கொண்டு செல்ல முடியாது, குறிப்பாக டான்ஸ் கிளப், பார் போன்றவற்றுக்கு செல்கின்றபோது பெண்கள் பெரும்பாலும் பணப் பை போன்றவற்றை வீட்டில் விட்டு விட்டு செல்கின்றனர், இவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்களுடன் கூடவே இருக்கின்ற ஐ போனின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி விடுகின்றது, எனவேதான் நெருக்கமாகவும், பாதுகாப்பாகவும் ஐ போனை வைத்திருக்க கூடிய வகையில் மார்புக் கச்சை தேவைப்படுகின்றது என்கின்றனர் இருவரும்.
இம்மார்புக் கச்சையின் பயன்பாட்டை அறிமுகப்படுத்துகின்றமைக்காக உத்தியோகபூர்வ இணையத்தளம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment