
ஆஸ்திரேலியாவில் உள்ள கிராமம் ஒன்றுக்கு ஆங்கில கெட்ட வார்த்தையில் உத்தியோகபூர்வ பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. இக்கிராமத்தில் 104 பேர் வசிக்கின்றனர். இவர்கள் இப்பெயரால் மிகவும் சங்கடப்படுகின்றார்கள்.
இப்பெயருடன் கூடிய அறிவித்தல் பலகைகள் இங்கு அடிக்கடி காணாமல் போய் விடுகின்றன. அத்துடன் அரைகுறை நிர்வாண பெண் இவ்வறிவித்தல் பலகைகளுக்கு முன்னால் புகைப்படங்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் கிராமத்தின் பெயரை மாற்றியே தீர வேண்டும் என்று கிராமவாசிகள் ஒரு மனதாக தீர்மானித்து உள்ளனர். இப்பெயர் மாற்றத்தை வலியுறுத்தி மனு ஒன்றை எதிர்வரும் நாட்களில் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க இருக்கின்றனர். ஆயினும் இப்பெயர் மாற்றம் அனுமதிக்கப்படுமா? என்பது சந்தேகமாகவே உள்ளது.



0 comments:
Post a Comment