சுவீடனில் விற்பனைக்கு வந்துள்ள சமாதியுடன் கூடிய மிரட்டும் வீடு ...!
வீடுகளின் பெறுமதியானது அதன் பரப்பளவு, அமைவிடத்தின் சந்தைப் பெறுமதி ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது.
சுவீடன் நாட்டில் வித்தியாசமான முறையில் வீடொன்று விற்பனைக்கு வந்துள்ளது.
மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடும் வீட்டினுள்ளே சமாதியொன்றுமாகஅமைத்து விற்பனைக்கு வந்துள்ளது.
அச்சமாதியினுள் எழும்புக் கூடொன்றும் உள்ளது.
சமாதியின் மேற்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளதால் அவ் எலும்புக் கூடு வெளியில் நன்கு தெரிகின்றது.
அங்கு சமாதியில் வைக்கப்பட்டுள்ள அந்நபர் அவ்வீட்டில் முன்னர் தங்கியிருந்தவர் என்பதுடன் அங்கிருந்து எவ்விடமும் செல்லாதவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
1750 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அவ்வீட்டின் விலை சுமார் 640,000 அமெரிக்க டொலர்களாகும்.
0 comments:
Post a Comment