நண்பரை கெளரவப்படுத்த சவப்பெட்டியில் உறங்கிவரும் நபர்...!    



  உறவுகளில் சிறந்தது நட்பே என்பதினை நிரூபிக்கும் சம்பவமொன்று பிரேசிலில் நடந்துவருகின்றது.

பிரேஸில் நாட்டின் தென்கிழக்கு மாநிலமான மினாஸ் கெராயிஸை சேர்ந்த ஸெலிரொஸி என்ற நபர் தனது இறந்த நண்பனை கௌரவப்படுத்தும் முகமாக கடந்த 23 வருட காலமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் நபரொருவர் சவப்பெட்டியில் உறங்கி வருகின்றார்.

அந்நபரைப் பற்றி அவருடைய 14 வயது பேரன் பாடசாலை பத்திரிகைக்கு கட்டுரையொன்றை எழுதியதையடுத்தே இந்த நீண்டகால இரகசியம் அம்பலமாகியுள்ளது.

இளமைக்காலம் முதலே உற்ற நண்பர்களாக பழகி வந்த ரொஸியும் அவரது நண்பரும் பல வருடங்களுக்கு முன் யார் முதலில் இறக்கிறாரோ அவருக்காக மற்றவர் சவப்பெட்டி வாங்கி வருவது என வாக்குறுதியளித்துக் கொண்டனர்.

இந்நிலையில் 1983ஆம் ஆண்டு கார் விபத்தில் ரொஸி இறந்து விட்டதாக தவறுதலாக கருதி நண்பர் ஒரு சவப்பெட்டியை வாங்கி வந்துள்ளார். எனினும் அவர் இறக்கவில்லை.

பின்னர் 1988ஆம் ஆண்டு அந்த நண்பர் இறந்துவிட்டதால் அவரது ஞாபகார்த்தமாக அவரால் வழங்கப்பட்ட சவப்பெட்டியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் ரொஸி உறங்கி வருகிறார்.


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India