
கின்னஸ் சாதனைப் படைத்த இவருக்கு தற்பொழுது 18 வயது. ஜன்ரி பொலோவிங் 59.93 சென்ரி மீற்றர் அல்லது 23.6 அங்குலம் உயரம் உடையவர் எனக் கூறப்படுகிறது. இவரது 12 ஆவது வயதில், இவருடைய வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக பொலோவிங்கின் தந்தையார் தெரிவித்துள்ளார்.
இறுதியாக கின்னஸ் சாதனைப் படைத்த நேபாள நாட்டைச் சேர்ந்த கஜேந்திரா தாப்பா மகாரை விடவும் பொலோவிங் 7 சென்ரி மீற்றர் உயரம் குறைந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு நடக்கவும், நிற்கவும் பல சிரமங்கள் இருந்தாலும் அயலவர பெரிதும் இவருக்கு உதவிபுரிவதாக இவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியான மிண்டேனோ தீவில் அமைந்துள்ள சின்டேன்கன் எனும் பகுதியில் இவரது பிறந்தநாளை முன்னிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றாகக் கூடியிருந்த வேளை, உலகிலேயே அதி குள்ளமானவர் இவர் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நலன்விரும்பிகளும், அரசியல்வாதிகளும் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் பண உதவிகள் செய்ததாக AFP செய்தி நிறவனம் தெரிவிக்கின்றது.
மேலும் பொலோவிங்கின் தந்தையார் இவரைப்பற்றி தெரிவிக்கையில்,
'இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். இவர் இவ்வாறு குள்ளமாக காணப்படுவதற்கான காரணம் வைத்தியர்களால் இதுவரை கண்டறியப்படவில்லை. இவருடன் பிறந்த ஏனைய சகோதரர்கள் மூவரும் சாதாரண உயரமுடையவர்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
0 comments:
Post a Comment