ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த்தவர் டாட் முகமது அல் பலுஷி.இவருக்கு ஏற்கனவே 17 மனைவிகள் இருக்கிறார்கள்.அவர்கள் மூலம் 90 குழந்தைகளும், 50 பேரக்குழந்தைகளும் இருக்கிறார்கள்.
அடுத்த 2 நாட்களில் அவர் ஒரு பாகிஸ்த்தான் பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் இருந்தாலும் அவருக்கு இன்னமும் திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் குழந்தை பெற்றுகொள்ளும் ஆசையும் அதிகமாக இருக்கிறது.அடுத்து ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.
அடுத்த மாதம் அவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வர இருக்கிறார், அங்கு அவர் ஒரு விபத்தில் இழந்த காலுக்கு பதிலாக செயற்கை கால் பொருத்துவதற்காக வர இருக்கிறார் எனவும். அப்படி வரும்போது இந்திய பெண்ணை சந்தித்து திருமணம் செய்து கொள்ள திட்டம் இட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போது உள்ள மனைவிகள் எல்லாம் படிக்காதவர்கள் எனவும் அவர் தற்பொழுது படித்த 18 முதல்22 வயது வரை உள்ள இந்திய பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஒரு முஸ்லீமுக்கு ஒரே நேரத்தில் 4 மனைவிகள் இருக்க வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் கூறுகிறது.இந்த சட்டத்தை தவிர்ப்பதற்காக இவர் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் போது ஏற்கனவே மனைவிகளாக இருப்பவர்களில் ஒருவரை விவாகரத்து செய்து விடுவார் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.


Paris Time


0 comments:
Post a Comment