புற்று நோய் என்ற உயிர்க்கொல்லி நோய் உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயினால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2030-ம் ஆண்டில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. தற்போது புற்று நோய் தாக்கியவர்களை ஒப்பிடும்போது 75 சதவீதம் பேர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் லியான் நகரில் உள்ள சர்வதச புற்று நோய் ஆராய்ச்சி மையம் 184 நாடுகளில் ஆய்வு நடத்தி வருகிறது. அதன்படி கடந்த 2008-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1 கோடியே 27 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
2030-ம் ஆண்டில் 2 கோடியே 22 லட்சம் பேர் புற்று நோய் பாதிப் புக்குள்ளாவார்கள் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மிகவும் ஏழ்மையாக உள்ள நாடுகளில் புற்ற நோய் தாக்குதல் அதிகம் இருக்கும்.
ஏனெனில் அங்கு வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறை, உணவு பழக்க வழக்கம் மற்றும் உரிய சிகிச்சை இன்மையே காரணமாகும்.
0 comments:
Post a Comment