ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் புல்லூர் ஏரி உள்ளது. இந்த ஏரியில் விவசாயி ஏபுல் ரெட்டி மண் தோண்டினார். அப்போது அங்கு கல்லில் செதுக்கப்பட்ட அழகான சிற்பங்கள் மற்றும் பாறைகள் கிடந்தன.
இதுபற்றி அவர் கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து பார்த்தபோது பழங்கால கல் சிற்பங்கள் என்பதை கண்டறிந்தார். பின்னர் இதுபற்றி தொல்பொருள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து பழங்கால கல் சிற்பங்களை பார்த்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
புல்லூர் ஏரியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில் உள்ள பாறையில் புத்தர் பாதம் பதிந்துள்ளது. இந்த புனிதப் பொருள் விரைவில் பக்தர்களுக்கு காட்சி பொருளாக வைக்கப்படும் என்றனர்.
0 comments:
Post a Comment