2,400 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இல்லாமல் குதித்து உலக சாதனை படைத்த வீரர்

width="200"


 
ஹாலிவுட் பட ஸ்டண்ட் நடிகர் கேரி கானரி. இவர் புகழ்பெற்ற 'ஹாரிபார்ட்டர்', 'சேம்பர் ஆப் சீக்ரட்ஸ்', ஜேம்ஸ்பாண்டு படமான 'டை அனதர் டே' உள்பட ஏராளமான படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.
 
41 வயதாகும் கேரி கானரி ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் இல்லாமல் குதித்து சாதனை படைக்க திட்டமிட்டார். இதற்காக தெற்கு இங்கிலாந்தில் தேம்ஸ் ஆற்றங்கரையோரம் உள்ள ஹென்லே என்ற திறந்தவெளி இடம் தேர்வு செய்யப்பட்டது.
 
காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் விசேஷ உடை அணிந்து இருந்தார். கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க தரையில் 18,000 அட்டை பெட்டிகளை 'ரன்வே' போல் அடுக்கி வைத்து இருந்தனர்.
 
ஹெலிகாப்டரில் சென்ற கேரி கானரி மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பறந்தபோது 2,400 அடி உயரத்தில் இருந்து பாராசூட் இல்லாமல் கீழே குதித்தார். அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகளில் துல்லியமாக விழுந்தார். இதன் மூலம் உலக சாதனை படைத்தார்.  
 
இந்த சாதனையை பார்க்க ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். கேரி கானரி குதித்ததும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சாதனையை நேரில் பார்க்க மனைவி விவென்னியும் வந்திருந்தார்.
 
சாதனைப்பற்றி கேரி கானரி கூறுகையில்,
 
ஆகாயத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பது என்பது நான் நினைத்துப் பார்க்காத சாதனை. தரையில் குதிக்கும்போது புதுவித அனுபவமாக இருந்தது. எனது கணிப்புகள் துல்லியமாக இருந்தது என்றார்.
 
இந்த சாதனைக்காக கேரி கானரி சுவிட்சர்லாந்தில் ஒரு வாரம் பயிற்சி எடுத்தார். பாராசூட்டுக்கு பதில் 'ஸ்விங் சூட்' என்ற நவீன ஆடையை பயன்படுத்தி மலைகளில் பயிற்சியில் ஈடுபட்டார். ஏற்கனவே இவர் தனது 23 வயதில் பாரிஸ் ஈபிள் டவர், லண்டன் ஐ ஆகிய கட்டிடங்களில் இருந்து பாராசூட்டில் குதித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India