
புவி வெப்பமடைவதால் பனி மலைகள் உருகி வருகின்றன. ஆனால் இமயமலையின் மேற்கு பகுதியான காரகோரம் மலையில் பனி இறுகி, கெட்டியாகி வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.
இந்த மலைத்தொடரில் பனியின் அளவு அதிகரித்து வருவதை பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. புவி வெப்பமடைவதால் இமய மலையின் மற்ற பகுதிகளில் உள்ள பனி மலைகள் உருகி வரும் நிலையில், இந்த மலை மட்டும் இறுகி வருவதன் காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.
இந்த பிராந்தியத்தில் உள்ள பனிமலைகள் 10 கோடி மக்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக இருந்து வருகின்றன. இமயமலையில் உள்ள மொத்த பனியும் 2035 ஆம் ஆண்டில் உருகிப் போய்விடும் என்று 2007 ஆம் ஆண்டு வெளியான காலநிலை மாற்றத்துக்கான குழுவின் அறிக்கை கூறியது.
இதையடுத்து, இமயமலை பனி விவகாரம் ஒரு முக்கிய அம்சமாக பலராலும் பேசப்படுகிறது. இந்த மலை இமயமலையின் ஒரு பகுதியாக இருக்கின்ற போதிலும், காரகோரம் மலை ஒரு வேறுபட்ட தொடராகவே காணப்படுகிறது.
0 comments:
Post a Comment