பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் உள்ள சுக்கூர் பகுதியில் இம்ரான் அலி சேர்(31) என்கிற எக்ஸ்-ரே தொழில்நுட்ப பணியாளருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த போதே அந்த குழந்தைக்கு ஆறு கால்கள் இருந்தன. இந்த குழந்தை சுக்கூரில் இருந்து திங்கட்கிழமை கராச்சியில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துவ மையத்திற்க்கு (என்.ஐ.சி.எச் ) மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து என்.ஐ.சி.எச் டைரக்டர் ஜமால் ராசா கூறும்போது: இது கால்கள் ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகளால் ஏற்பட்டது எனவும் இதில் ஒரு குழந்தை உயிருடன் இருப்பதாகவும் மற்றொன்றின் உடல் மறைந்து கால்கள் மட்டும் இருக்கிறது. தற்போது இக்குழந்தை நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனையில் உள்ள தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், குழந்தையின் அதிகப்படியான கால்களை நீக்குவது அந்த குழந்தையின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம் எனவும் இது மருத்துவ சிக்கல்கள் நிறைந்த ஒன்று என்றும் தெரிவித்தார்.
எனினும் குழந்தையின் தந்தை இம்ரான் தனது குழந்தையை எப்படியாவது காப்பாற்றி தர வேண்டும் என மருத்துவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.


Paris Time


0 comments:
Post a Comment