நம்ப முடியாதவை! (உங்களுள் ஒரு உள்ளுணர்வு!)


 உள்ளுண‌ர்வு...

 

இது எம் அனைவரையும் நிச்சயமாக ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஆட்கொண்டிருக்கும். என்ன விளங்கவில்லையா?

ஜோசித்துப்பாருங்கள்....

 

வீட்டை விட்டு வெளியேறும் போது குடையை எடுக்கசொல்லும்...(அன்று மழை திடீரென பெய்திருக்கும்)

பஷ் இல் ஏற வெளிக்கிட நினைக்கும் போது அடுத்ததில் போகலாமே என்று சொல்லும்...( நீங்கள் போகவிருந்த பஷ் எங்காவது ஒரு இடத்தில் பழுதடைந்திருக்கும்.)

இன்னும் பல... (என்னை இந்த உள்ளுணர்வு சில‌ வேளை காப்பாத்தியுள்ளது. முக்கியமாக, எனது நண்பர்களுடன் ஒரு இடத்திற்கு செல்லவிருந்தபோது ஏதோ ஒன்று "போகாதே!" என சொன்ன மாதிரி இருந்ததால் நான் பினவாங்கினேன்; அவர்கள் பொலிசாரினால் சந்தேகத்தின் பெயரில் கைதானார்கள்.(பின்னர் விடுதையாகிவிட்டார்கள்). மற்றது என்னுடைய தொலைபேசியை காப்பாத்தியது.

 

இதெல்லாம் சின்னவிசையங்கள் நம்மவே முடியாத பல விசையங்கள் நடந்துள்ளன...

 

இரண்டாம் உலகயுத்தத்தின் உச்சக்கட்ட காலம் அது...

ஜேர்மன் விமானங்கள் லண்டன் நகர்மீது சரமாரியாக குண்டுமழை பொழிந்து கொண்டிருந்தன.

வின்சன்ட் சர்ச்சில், இங்கிலாந்தின் பிரதமர். எவளவு யுத்த நெருக்கடியில் இருந்தாலும் உள்ளுணர்வை மதிக்கும் ஒரு நபர்.

ஒர் நாள் தனது வீட்டிற்கு 3 மந்திரிகளை விருந்துக்கு அளைத்திருந்தார். விருந்து ஆரம்பமாகி சில நிமிடங்களிளேயே விமானத்தாக்குதல் ஆரம்பமாகியது. திடீரென கதிரையை விட்டு எழுந்த சர்ச்சில் நேரடியாக சமையல் அறைக்குச்சென்று சிப்பந்திகளிடம் " சாப்பாட்டை டைனிங் ரேபிளில் வைத்து விட்டு.. உடனே பாம் செல்டர் பகுதிக்கு சென்றுவிடுங்கள்..." என கட்டளை இட்டுவிட்டு திரும்பி வந்தார்.

3 நிமிடங்கள் கழிந்தன...

சமையல் அறை மீது குண்டு விழுந்து சமையலறை சுக்குனூறாகியது.

சமையளறை ஊளியர்கள் சர்ச்சிளின் கட்டளையாள் காப்பாத்தப்பட்டனர்.

திடீரென சென்று எச்சரிக்கை கட்டளை இடும்படி சர்ச்சிலை தூண்டியது எது?...

ஜோசித்துப்பாருங்கள்...

-------

Source : valaakam.blogspot.com




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India