சிறுநீரகத்தை விற்று ஐபேட் வாங்கிய சிறுவன்

width="200"


 
சீனாவை சேர்ந்தவன் வாங் (17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவன் ஒரு உயர் நிலைப்பள்ளியில் படித்து வந்தான். தற்போது நவீன முறையில் பாடல்கள் கேட்கும் "ஐபேட்" மற்றும் "ஐபோன்" வாங்க மிகவும் ஆசைப்பட்டான். ஆனால் அவற்றை வாங்கி தரும் அளவுக்கு அவனது பெற்றோரிடம் பணம் இல்லை. எனவே, தனது சிறுநீரகத்தை விலைக்கு விற்க முடிவு செய்தான்.
 
அதற்கான அறிவிப்பை ஆன்லைனில் வெளியிட்டான். அதை பார்த்த சிலர் அவனை தொடர்பு கொண்டனர். பின்னர் ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்துக்கு தனது சிறுநீரகத்தை விற்றான். அதற்கான ஆபரேசன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. யூனான் மாகாண டாக்டர் சாங் ஷோன்யூ ஆபரேசன் செய்தார். இதற்கிடையே சிறுநீரகத்தை விற்ற சிறுவன் வாங் தற்போது உடல் நலக்கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான்.
 
அதை தொடர்ந்து இந்த விவகாரம் தற்போது வெளியே தெரியவந்தது. எனவே, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக சிறுவனிடம் இருந்து சிறுநீரகத்தை ஆபரேசன் மூலம் அகற்றியதாக டாக்டர் சாங் உள்பட 4 பேரை கைது செய்தனர். "ஐபேட்" வாங்குவதற்காக தனது சிறுநீரகத்தை சிறுவன் விற்ற சம்பவம் சீனாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.




0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India