பின்னால் ஒரு லொறியை இழுத்துச் செல்லும் டிரக் டிரைவர் அருந்தப்பில் தப்பியிருக்கிறார். கரணம் தப்பினால் மரணம் தான் இவருக்கு.
ஆனாலும் இவர் பின்னால் கட்டி இழுந்த வந்த லொறி சரியத் துவங்கும் போதே அலேர்ட்டாகி முன்னாள் இருந்த வாகனத்தில் இருந்து குதித்து விட்டார் டிரைவர்.
இவர் குதித்ததும் அடுத்த நொடி டிரக், லொறி இரண்டுமே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்துள்ளது.
டிரக் டிரைவர் மட்டும் மாட்டியிருந்தால் உடல் பாகங்களாகத் தான் பிரித்து எடுத்திருக்க வேண்டும்.
அவ்வளவு மோசமாக இருந்திருக்கும். இந்தச் சம்பவமானது நோர்வே நாட்டில் உள்ள Leirosen எனும் இடத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக இங்குள்ள லொறி டிரைவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு எலும்பில் பல பகுதிகளிலும் முறிவுகள் காணப்படுகின்றது.


Paris Time


0 comments:
Post a Comment