உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்திலுள்ள கங்கா நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திர படேல் (வயது 40). இவரது மனைவி வர்ஷா (வயது 28). ராஜேந்திர படேல் இராணுவத்தில் பணிபுரிந்தவர் ஆவார்.
பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2002-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு இராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ராஜேந்திர படேல் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்திருக்கிறார்.
நேற்று இரவு ராஜேந்திர படேலின் வீட்டிற்கு வந்த அவரது நண்பர் ராஜேந்திர குமார், வர்ஷாவிடம் படேலைக் குறித்து விசாரித்துள்ளார். ஆனால் வர்ஷா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்திருக்கிறார். அச்சமயத்தில் பாத்ரூமிற்கு சென்ற ராஜேந்திர குமார், பாத்ரூமின் தரை புதிதாக கட்டப்பட்டு இருந்ததை கவனித்தார். இதுகுறித்து வர்ஷாவிடம் கேட்டதற்கும் சரியான பதில் வராமல் போகவே, சந்தேகமடைந்த குமார் கங்கா நகர் போலீஸிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து படேலின் வீட்டிற்கு வந்த போலீசார் வர்ஷாவிடம் விசாரணை செய்தபோது, அவரது கணவரை கொன்று புதைத்து விட்டேன் என்று கூறினார். இதனையடுத்து பாத்ரூம் தரையை தோண்டிய போலீசார் படேலின் சடலத்தை கைப்பற்றினர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வர்ஷாவை சிறையில் அடைத்துள்ளனர். படேலை அவர் என்ன காரணத்திற்காக கொன்றார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கணவனை மனைவியே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Paris Time


0 comments:
Post a Comment