தக்கலையை அடுத்த காட்டாத்துறையை சேர்ந்தவர் கோபி. இவரது மகள் அனுரியா (வயது 22). இவர் தக்கலை பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.டெக். படித்து வருகிறார். இவருக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது.
இந்தநிலையில் திருவனந்தபுரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர இவருக்கு அழைப்பு வந்தது. அதில் பங்கேற்பதற்காக அனுபிரியா வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அதன்பின்பு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடிய வில்லை. இதனால் அவர்கள் தக்கலை போலீசில் புகார் செய்தனர். விசாரணையில் அனுபிரியா தக்கலையில் இருந்து திருவனந்தபுரம் செல்வதாக வீட்டில் கூறி பஸ்சில் புறப்பட்டு சென்றவர் அங்கு போகாமல் சாமியார்மடத்திலேயே இறங்கியிருப்பது தெரிய வந்தது.
அங்கு அவரை காரில் காத்து நின்ற கும்பல் கடத்திச் சென்றதும் கண்டுபிடிக்கப் பட்டது. அனுபிரியாவை கடத்திய நபர்கள் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர் அப்போது அனுபிரியா வின் அக்காள் கணவரும் அதே நேரத்தில் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. எனவே அனுபிரியா அவரது அக்காள் கணவருடன் மாயமாகி இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுதொடர்பாக அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர்களை தேடிவருகின்றனர்.
0 comments:
Post a Comment