
ஐரோப்பிய நாடுகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. சுவீ டன் நாட்டில் தற்போது மைனஸ் 30 டிகிரி தட்பவெப்ப நிலை நிலவுகிறது. அங்கு எங்கு பார்த்தாலும் சுமார் 15 அடி உயரத்துக்கு பனி கொட்டிக் கிடக்கிறது. இவ்வாறு கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிக்குள் சிக்கிய காரில் 2 மாதமாக உயிர் வாழ்ந்த 45 வயது நபர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி சுவீடனின் வடக்கு பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு இவர் காரில் சென்றார். மெயின் ரோட்டுக்கு வரும் வழியில் கடும் பனி கொட்டியது. அதனால் காரின் என்ஜின் நின்று விட்டது. எனவே, அவரால் அங்கிருந்து வெளியே வர முடியவில்லை. இதற்கிடையே, பனி மழை போல் கொட்டியதால் கார் பனிக்கட்டிக்குள் புதைந்தது. ஆகவே, காரின் பின் சீட்டில் படுத்த அவர் சாப்பாடு இன்றி 2 மாதம் பட்டினி கிடந்தார்.
அவ்வப்போது உருகிய பனிக்கட்டியின் தண்ணீரை குடித்த படியே உயிர் வாழ்ந்தார். இந்த நிலையில் வனப்பகுதியில் கொட்டி கிடந்த பனிக்கட்டியை ஊழியர்கள் அகற்றினர். அப்போது அங்கு பனிக்குள் ஒரு உடைந்த கார் சிதைந்து கிடக்கிறது என்று கருதி அதை எந்திரம் மூலம் வெளியே இழுத்தனர். அப்போது காருக்குள் அந்த நபர் மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்து உடனே ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
0 comments:
Post a Comment