
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இருந்து சென்ற விமானத்தில்பெங்யூ என்ற 24 வயது பெண் பயணம் செய்தார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அவருக்கு பிரசவ வலி ஏறபட்டது.
சீன விமானங்களில் பணிப்பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் பயிற்சியும் அளிக்கப்படுவது உண்டு. எனவே விமான பணிப்பெண்களே அவருக்கு பிரசவம் பார்த்தனர்.அந்த பெண்ணுக்கு சுக பிரசவம் ஏற்பட்டது. குழந்தை 3 கிலோவுடன் ஆரோக்கியமாக இருந்தது. விமானம் தரை இறங்கியதும் தாய்- குழந்தை இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
0 comments:
Post a Comment