
சீனாவின் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள வனவிலங்குகள் பூங்காவில் செம்மறி ஆட்டுக்கும், மானுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
தற்செயலாக ஒருநாள் இரண்டுக்கும் இடையே ஏற்பட்ட சந்திப்பு தீவிர காதலாக மாறியுள்ளது. தற்போது இவற்றை பிரிக்க முடியாமல் ஊழியர்கள் தவிக்கின்றனர்.
இதுபற்றி பூங்கா அதிகாரி லி லி கூறியதாவது: ஆண் செம்மறி ஆட்டின் பெயர் சாங்மோ. பெண் மானின் பெயர் சுன்சி. கிட்டத்தட்ட தன் இனத்தையே மறந்துவிட்ட செம்மறி ஆடு தற்போது மான் கூட்டத்துடன் தான் முழுநேரத்தையும் செலவிடுகிறது.
ஏறக்குறைய ஐந்தாறு மான்களுடன் ஆடு பழகினாலும், சுன்சி மானை தனது காதலியாகவே கருதி பழகி வருகிறது. இது சாதாரண நெருக்கம் என்று தான் முதலில் நினைத்தோம். படிப்படியாக இதில் இறுக்கம் அதிகரித்தது. இனங்களை தாண்டி காதல் ஏற்பட்டிருக்கிறது என்று பிறகு தான் தெரியவந்தது.
இவற்றை தனித்தனியே பிரிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இவற்றின் காதலை புரிந்து கொண்ட நாங்கள் இரண்டையும் ஒன்றாகவே தங்க வைத்துள்ளோம்.
மிகவும் பாசமாக பழகும் இவற்றுக்கு பிறக்கும் குட்டி, எப்படி இருக்கும் என்ற ஆர்வம் எங்களுக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் உள்ளது. வித்தியாசமான இந்த காதலர்களை பார்க்க பூங்காவில் கூட்டம் அலை மோதுகிறது என்று தெரிவித்தார்.
Cj
0 comments:
Post a Comment