
உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதால் இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழுவினர் இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அந்த பணி முடிந்து விட்டதால் அதை எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த ஊசி மருந்து மார்பக புற்றுநோயை மட்டுமின்றி, கணைய புற்றுநோயையும் குணப்படுத்தக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து அந்த மருந்தை மார்பக புற்றுநோயால் பாதித்த பெண்ணின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது சோதனைக்கூட அளவில் உள்ளது.
இந்த மருந்து 90 சதவீத மார்பக புற்றுநோயை குணப்படுத்துவது கண்டறியப்பட்டது. எனவே முற்றிலும் நோயை குணமாகும் வகையில் 2013ம் ஆண்டு இறுதிக்குள் மருந்து தயாரிக்கப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment