
அண்டார்டிகா கண்டத்தில் தனியாக ஒரு பெண் பயணம் செய்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் அஸ்தான். அண்டார்டிகா பனி பிரதேசத்தில் தனியாக பயணம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்தது. எனவே, அவர் அதற்காக பயணத்தை மேற்கொண்டார்.
எங்கும் வெண்மையாக காட்சி அளிக்கும் பனி பிரதேசத்தில் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தனது பயணத்தை தொடங்கினார். அங்கு வீசும் கடும் பனிப் புயல் மற்றும் பனிப்பாறைகள் மற்றும் உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு இடையே தற்போது 3-ல் 2 பங்கு அண்டார்டிகா கண்டத்தை கடந்துள்ளார்.
பனிச்சறுக்கு கட்டைகளை காலில் கட்டிக்கொண்டு அண்டார்டிகாவின் தென் முனையை நோக்கி தனது பயணத்தை அவர் மேற் கொண்டுள்ளார். இந்த வார இறுதிக்குள் அவர் தென் முனையை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பனிப்பிரதேசமான அண்டார்டிகாவை ஒரு தனி மனிதனாக கடந்து சாதனை படைக்கவேண்டும் என்பதே இவரது லட்சியமாகும். அதற்காக அவர் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.
0 comments:
Post a Comment