
ஜப்பானியர்கள் தங்கள் கழிப்பறையை மிகவும் புனிதமானதாக கருதுகின்றனர். ஏனெனில், அது கடவுள் வந்து செல்லும் வழியாக நம்புகின்றனர். அதற்காக மிக அதிநவீன ஆடம்பர கழிப்பறைகளை அவர்கள் விரும்புகின்றனர்.
மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஜப்பான் நிறுவனங்கள் மிக அழகிய வேலைப்பாடுகள் அடங்கிய அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த கழிப்பறைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில், தற்போது அங்கு 72 ஆயிரம் பளிங்கு கற்களால் ஆன கழிப்பறையை தயாரித்துள்ளனர். அவை ஒன்றின் விலை ரூ.50 லட்சம். இந்த கழிப்பறையை ஜப்பான் நிறுவனத்துடன் சேர்ந்து ஆஸ்திரியாவின் நகை நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.
தற்போது இது பொதுமக்கள் பார்வைக்காக ஷோரூமில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்க்கும் பொதுமக்கள் வியந்து பாராட்டுகின்றனர். இது இம்மாத இறுதியில் விற்பனைக்கு வருகிறது.
0 comments:
Post a Comment