ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மிகப்பெரிய பரிசு தொகையான ரூ.4,200 கோடிக்கான லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்பட்டது. அதற்கு "எல் கண்டேர்" என பெயரிடப்பட்டிருந்தது. அந்த லாட்டரி சீட்டுகளை சொடேபோ என்ற கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூட்டாக சேர்ந்து 1800 டிக்கெட்டுகளை வாங்கினர். அதை அங்குள்ள ஒரு இனிப்பு விற்பனை கடையில் வாங்கப்பட்டன.
அவற்றில் ஒரு சீட்டுக்கு ரூ.4200 கோடி பரிசு தொகை கிடைத்தது. அதனால் அந்த கிராமமே மகிழ்ச்சி அடைந்தது. கிராம மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் குதூகலம் அடைந்தனர். ஷாம் பெயின் மது விருந்துடன் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். பரிசு பெற்றவர்களுக்கு சொடேபோ கிராம மேயர் சார்லஸ் சாம்பெரீஷ் வாழ்த்து தெரிவித்தார். லாட்டரி சீட்டு வாங்கிய ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2 கோடியே 33 லட்சம் பணம் கிடைக்கும்.


Paris Time


0 comments:
Post a Comment