
இங்கிலாந்தில் உள்ள கார்மர்ண்டன் ஷயர் நகரை சேர்ந்தவர் சுல்லிவன். இவர் நாய் ஒன்று வளர்த்து வந்தார். 2? வயதான அந்த நாய் கர்ப்பமாக இருந்தது. இந்த நாயின் வயிறு அதிக அளவில் பெரிதாக இருந்தது.
இந்த நிலையில் நாய் குட்டிகளை பிரசவித்தது. மொத்தம் 15 குட்டிகள் ஈன்றுள்ளது. இதில் 5 ஆண் குட்டிகள், 10 பெண் குட்டிகள். ஒரே நாய் 15 குட்டிகள் போட்டது அதிசயமாக கருதப்படுகிறது. இதை ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து சுல்லிவன் கூறியதாவது:-
நாய் வயிறு பெரிதாக இருந்ததால் 7 அல்லது 8 குட்டி போடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 15 குட்டி போட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் இத்தனை குட்டியையும் எங்களால் வளர்க்க முடியாது. 2 குட்டிகளை மட்டும் எங்களோடு வளர்க்க போகிறோம். மற்றவற்றை விற்று விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment