விண்வெளிக்கான சூப்பர் பீர் ரெடி ..!
சிட்னி: விண்வெளியில் குடிப்பதற்கான பீர் உருவாக்கப் பட்டுள்ளது. இதை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்துள்ளது.விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவின் வர்ஜின் நிறுவனம் ‘வர்ஜின் கேலக்டிக்’ என்ற பெயரில் விண்வெளி சுற்றுலாவை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. விண்வெளியில் 2016ம் ஆண்டுக்குள் ஓட்டல் அமைப்பதாகவும் சில நிறுவனங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், விண்வெளியில் குடிப்பதற்கான பீரை ஆஸ்திரேலியாவின் 4 பைன்ஸ் ப்ரூயிங் கம்பெனியும் அமெரிக்காவின் சாபர் அஸ்ட்ரானமிக்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ளன.
‘ஸ்பேஸ் பீர்’ பற்றி இந்நிறுவன ஆராய்ச்சியாளர்கள் ஜரோன் மிசெல், ஜேசன் ஹெல்ட் கூறியதாவது:
விண்வெளியில் புவிஈர்ப்பு விசை கிடையாது. அதனால் வாயு மட்டுமின்றி, திரவ பொருட்களும் மிதக்கும். வயிற்றுக்குள் போன பிறகு, வாயுவுடன் சேர்ந்து திரவமும் மேலே எழுந்து வாந்தியாக வெளியேறிவிடும். எனவே, கேஸ் அளவை மிகமிக குறைத்து பீர் தயாரிக்கப்பட்டுள்ளது.
விண்வெளியில் நாக்கின் சுவை அரும்புகள் சற்று வீங்குவதால் அவ்வளவாக ருசி தெரியாது. எனவே, நாக்குக்கு ருசி தெரியும் வகையில் மிகமிக ஸ்டிராங்காக இந்த பீர் தயாரித்துள்ளோம்.
குயீன்ஸ்லேண்ட் பல்கலைக்கழகத்தின் புவிஈர்ப்பு இல்லா மையத்தில் இதற்கான சோதனையும் நடந்து முடிந்துவிட்டது. புவிஈர்ப்பு விசை இல்லாத இடத்தில் ஜெட் விமானத்தை குட்டிக்கரணங்கள் போட வைத்து அதில் ஒருவருக்கு இந்த பீர் கொடுத்தும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
0 comments:
Post a Comment