பாம்பைக் கடித்து இரத்தம் குடித்த நபர் கைது அமெரிக்காவில் விசித்திர சம்பவம்
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்கிறோம். ஆனால், தன்னைக் கடிக்க வந்த பாம்பைத் தான் கடித்து இரத்தத்தைக் குடித்த விசித்திரமான சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த டேவிட் செங்க் (வயது -54) , பக்கத்து வீட்டு செல்லப் பிராணியான மலைப்பாம்பை, வழக்கமாக எட்டிப் பார்க்காத டேவிட், நேற்று முன்தினம் வீட்டுக்குள் நுழைந்து உங்கள் செல்லப் பிராணியை ஒரு நிமிடம் கொஞ்சி விட்டு தருகிறேன் என்று கூறியுள்ளார். 4 அடி நீளமான மலைப் பாம்பை அதன் எஜமானர் எடுத்து கொடுத்துள்ளார்.
பாம்பும் எஜமானரும் எதிர்பார்க்காத வேளையில் பாம்பைக் கடித்துக் குதறிவிட்டார் டேவிட். அவரிடம் போராடி பாம்பைக் காப்பாற்றிய பக்கத்து வீட்டார், உடனடியாக அதை கால்நடை வைத்தியரிடம் காட்டியுள்ளனர். இதன்பின்னர் பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர். வாயில் இரத்தம் சொட்ட நின்ற டேவிட் கைது செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment