பரபரப்பை ஏற்படுத்திய பறக்கும் குட்டி தேவதை!

மெக்சிக்கோவின் மேற்கு பகுதயில் பரப்பான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:- மெக்சிக்கோவை சேர்ந்த 22 வயதான பெண்மணி யோசி மல்டொனால்டொ என்பவர். இவர் தனது வீட்டில் விசித்திரமான ஒரு உயிரினத்தை கண்டுபிடித்துள்ளார்.
இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில் நான் ஆரம்பத்தில் இந்த உயிரினத்தைப்பார்த்ததும் ஏதோ தும்பி என நினைத்தேன். பின்னர் சற்று உற்றுப்பார்த்ததும் வியப்படைந்து விட்டேன் காரணம் அது ஒரு மூதாட்டி தேவதையாக காணப்பட்டது.

அசையும் என பார்த்த போது அது இறந்த நிலையில் காணப்பட்டது என தெரிவித்தார். இந்த சம்பவம் மெக்சிக்கோ பகுதி எங்கும் காட்டுதீபோல பரவியது.

இதனால் இந்த அதிசயத்தை காண மக்கள் படையெடுத்த வண்ணம் உள்ளார்கள். இதுவரை 3000 க்கு மேற்பட்வர்கள் இந்த அரிய தேவதையை பார்த்து சென்றுள்ளார்கள்.

மேலும் மக்கள் வந்த வண்ணம் உள்ளதால் யோசி மல்டொனால்டொவின் வீட்டுக்குள் சென்று இந்த அதிசயத்தை பார்க்க ஒரு மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேரிமுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விசித்திர தேவதையை பார்ப்பதற்கு இறக்கைகளுடளும் மனித முக அமைப்புடனும் சுமார் 2செ.மீற்றர் உயரத்துடன் காணப்படுகிறது.

இதைப்பார்வையிட அதிக நேரம் காத்திருக்க வேண்டியேற்படுவதால் அப்பகுதியில் இதனை புகைப்படம் எடுத்துவ விற்பனை செய்த வருகிறார்கள். மற்றும் இவரின் வீட்டிற்கு அருகில் குளிர்பாணம் சிற்றுண்டி என்பனவும் விசேசமாக விற்கப்படுகிறதாம்.
http://www.youtube.com/watch?v=U7gucguht28&feature=player_embedded#!

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India