
சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் யூவ்ஸ் ரோசி(51). அந்நாட்டு விமானப்படையில் ஜெட் விமான பைலட்டாக 17 ஆண்டுகள் பணியாற்றியவர்.
பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பல்வேறு சாகச பயணங்கள் மேற்கொண்டு வருகிறார். ஜெட் கருவியை உடலில் இணைத்துக் கொண்டு பறவை போல பறந்து அமெரிக்காவில் கடந்த 6ம் திகதி சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கொலராடோ ஆற்றை ஒட்டி அமைந்துள்ள கிராண்ட் கேனைன் பள்ளத்தாக்கு பகுதியில் இந்த சாகசத்தை அவர் நிகழ்த்தினார். அப்பகுதியில் உள்ள குவானோ பாயின்ட் என்ற இடத்துக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
பறவையின் இறக்கைகள் போன்ற தோற்றம் கொண்ட ஜெட் வாகன கருவியை உடலில் இணைத்துக் கொண்டார். 2 ஆயிரம் அடி உயரத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் போது ஜெட்டை இயக்கியபடியே அதில் இருந்து குதித்தார். பறவை போலவே அனாயாசமாக பறந்த அவர் 8 நிமிடத்தில் 8 கி.மீ தூரத்தை கடந்தார். பின்னர் பாராசூட்டை விரித்து பத்திரமாக தரையிறங்கினார்.


4 இன்ஜின்கள் கொண்டது. இவர் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரிலும், இங்கிலாந்து மற்றும் பிரான்சை பிரிக்கும் ஆங்கில கால்வாயிலும் இதேபோல ஏற்கனவே பறந்து சாகசம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment