எகிப்தில் தொலைந்த 17 பிரமிட்டுக்கள் கண்டுபிடிப்பு





  எகிப்தில் நிலத்திற்கு அடியில் புதைந்துள்ள 17 பிரமிட்டுக்கள் 1000 கல்லறைகள் மற்றும் 3000 பண்டைய குடியேற்றங்கள் ஆகியன செய்மதி தொழிநுட்பத்தினால் கண்டுடறியப்பட்டுள்ளன. 




பேர்மிங்ஹாமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர். 


இன்ப்ரா ரெட் இமேஜிங் ( infra-red imaging )என்ற தொழிநுட்பத்தின் மூலமே இவை கண்டறியப்பட்டுள்ளன.










இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளவற்றில் 2 பிரமிட்களை தொல்பொருள் ஆய்வாளர்கள் நிலத்துக்கடியில் தோண்டி கண்டுபிடித்துள்ளனர். 


பூமியிலிருந்து 400 மைல்கள் தொலைவிலுள்ள செய்மதியில் பொருத்தப்பட்டுள்ள புகைப்படக்கருவிகள் மூலமே இவை இணங்காணப்பட்டுள்ளன. 


இப் புகைப்படக்கருவிகள் அதி சக்தி வாய்ந்தவை எனபதுடன் புவியின் மேற்பரப்பிலுள்ள 1 மீற்றருக்கும் குறைவான விட்டத்தை உடைய பொருட்களையும் படம் பிடிக்கவல்லன. 


இது எகிப்திய வரலாற்றில் பாரிய மைல்கல்லாக கருதப்படுவதுடன் இத்தகைய பல பண்டைய கண்டுபிடிப்புக்கள் மேற்கொள்ளப்படலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.  


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India