உளுந்தூர்பேட்டையில் வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் சண்டையிட்ட பூனையை, தீயணைப்புத் துறையினர் மீட்டனர். விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது வீட்டில் நேற்று பகல் 12.15 மணிக்கு திடீரென ஒரு நல்ல பாம்பு புகுந்து அச்சுறுத்தியது. தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நல்ல பாம்பை மீட்டு, காட்டில் கொண்டு விட்டனர்.
இதற்கிடையே, உளுந்தூர்பேட்டை, ஈஸ்வரன்கோவில் தெருவைச் சேர்ந்த அழகர் என்பவரது வீட்டிற்குள் நேற்று பகல் 2.15 மணிக்கு ஒரு பாம்பு புகுந்தது.
இதை பார்த்த பூனை ஒன்று, பாம்புடன் சண்டையிட்டது. இரண்டும் ஆக்ரோஷமாக சண்டையிட்டுக் கொண்டே செப்டிக் டேங்கிற்குள் விழுந்தன.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பாம்பையும், பூனையையும் மீட்டனர்.
நான்கு அடி நீளமுள்ள இந்த பாம்பு, கட்டுவிரியன் வகையில் கொடிய விஷமுள்ள 'குட்டி பஞ்சர்' என்ற வகையைச் சேர்ந்தது.


Paris Time



0 comments:
Post a Comment