மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் கிராமத்தின் வீடொன்றில் இருந்து 64 நாகபாம்புக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
செட்டிபாளையம் வைத்தியசாலை வீதியில் உள்ள கண்ணதாசன் என்பவரது வீட்டிலிருந்தே இன்று காலை இந்த நாகபாம்புக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்து நாகப்பாம்பு ஓடுவதைக் கண்ட அவர் வீட்டை துப்பரவு செய்ததில் 64 பாம்புக்குட்டிகளை கண்டெடுத்துள்ளார்.செட்டிபாளையம் வைத்தியசாலை வீதியில் உள்ள கண்ணதாசன் என்பவரது வீட்டிலிருந்தே இன்று காலை இந்த நாகபாம்புக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனைக் கேள்வியுற்று அப்பிரதேசத்தின் பொதுமக்கள் பெருந்திரளாக அதனை பார்வையிட சென்று கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஒரே இடத்தில் இவ்வாறான பெருந்தொகையான பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
0 comments:
Post a Comment